மழை!
மழைசெய்தது மிகப் பெரிய பிழை
படித்த முட்டாள்களுக்கு கற்று கொடுத்தது பாடம்
பலருக்கு கலைந்தது வேடம்
முன்பொரு நாள் காடு நாடானது
அன்றொரு நாள் ஏரி வீடானது
தாய் வீடு தேடி தண்ணீர் வந்தது
மழை, பல மனிதர்களை கடவுளாக்கியது
பல மடையர்களை மனிதனாக்கியது
சிலரை பிணமும் ஆக்கியது
இயற்கை !
நம்மை பார்த்தது ஒரு கை
விலை உயர்ந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கியது
விலை மதிப்பில்லா மனிதர்களின் மதிப்பு புரிந்தது
நகரம் சுத்தமானது
வீடுகள் நாறியது
தண்ணீர் நகரத்தை தூர் வாரியது
மழை, பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு
பெரியவர்களுக்கு கற்றுக் கொடுத்தது பாடம்
கற்ற பாடங்களை நினைவில் கொள்வோம்
படித்த பாடங்களை பயன்படுத்துவோம் நம் வாழ்க்கையில்