Total Blog Pageviews...

Thursday, July 21, 2011

முதல் வகுப்பு





இரயிலில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு இருந்த ராஜா, கையில் இருந்த ஆங்கில புத்தகத்தை முறைத்துக் கொண்டு இருந்தான். வண்டி கிளம்பும்போது இரண்டு  பிச்சைக்காரர்கள் ஏறினார்கள். அவ்விருவரில் குருட்டு பிச்சைக்காரரான, பெரியவர்  காதருகில் உடன் வந்த சிறுமி ஏதோ கூறினாள். பாட ஆரம்பித்த அவர், அவள் பேச்சைக் கேட்டு பாடுவதை நிறுத்தினார். ராஜா தன் பையில் இருந்து ஒரு ரூபாயை எடுத்துக் காத்திருந்தான். ஆனால் அவர்கள் பிச்சை கேட்டு வரவில்லை. மாறாக அடுத்த நிலையத்தில் வண்டி நின்றதும் அடுத்த பெட்டிக்குச் சென்று விட்டனர். வியந்து போன ராஜா அவர்கள் செயலின் காரணம் புரியாமல் அடுத்த நிறுத்தத்தில் ஓடிச் சென்று பாடிக் கொண்டிருந்த அவர்களிடம் காரணம் கேட்டான். அவர்கள் ஒரே வரியில் பதில் சொல்லி நகர்ந்தனர் "அது முதல் வகுப்பு தம்பி"

ஏகலைவன் () கணேஷ் சந்திரசேகரன்