கல்யாணப் பரிசு
வரவேர்ப்பறையில் புது உடையில் அமர்ந்திருந்த பாரி உரத்த குரலில் டிரஸ் செய்து கொண்டிருந்த தன் மனைவியிடம் கேட்டான். "உன் கசின் கல்யாணத்துக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்.... நைட் லாம்ப் "
"ஏன் எங்க வீட்டு சொந்தம்னா அவ்வளவு சீப்பா "
"சரி அப்ப கடிகாரம் ஓகே வா"
"இல்லங்க, அவ என்னோட க்ளோஸ் கச்சின், அதனால கிச்சன் செட் கொடுக்கலாம். அப்பதான் கௌரவமா இருக்கும்"
"உங்க சொந்தம்னா மட்டும் நல்ல கிப்ட்டா சொல்லுவே. சரி வா போகலாம். ஏற்கனவே லேட் ஆகிடுச்சு" என்று இருவரும் பட்டு புடவை கோட் சூட்டில் தாங்கள் புதிதாக வாங்கிய காரின் சாவியை எடுத்துக்கொண்டு தங்களது திருமணத்திற்கு பரிசாக வந்திருந்த கிச்சன் செட்டை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.
ஏகலைவன் (எ) கணேஷ் சந்திரசேகரன்